எங்களைப்பற்றி


அகமுடையார் சமுதாய மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதை முதற்நோக்கமாக கொண்டு "அகமுடையார் மக்கள் இயக்கம்" தொடங்கப்பட்டது.


எதிர்கால் நலன் கருதி அகமுடையார் இன மாணவர்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது.

படித்து முடித்த அகமுடையார் இன இளைஞர்களுக்கு உரிய (அரசு - தனியார்) வேலைவாய்ப்பை பெற்று தருவது. மேலும், அகமுடையார் இன இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்புகள் மற்றும் சிறுதொழில் விழிப்புணர்வு மையம் அமைத்தல், அவரவர் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பினை பெற்றுத்தர தேவையான முயற்சிகளை செய்வது.

தீண்டாமைச் சட்டத்தில் பாதிக்கப்படும் அகமுடையார் இன இளைஞர்கள் சட்டஅறிவு விளக்கம் பெற்று, இந்த (PCR act) பிரச்சனைகளில் சுமூக தீர்வு பெற வழக்குரைஞர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களை கொண்டு சட்ட விழிப்புணர்வு முகாம் அமைப்பது.

கிராமப்புற அகமுடையார் இன மக்களின் விவசாயம் சார்ந்த அவர்களின் உரிமையைப்பெற அறிவுறுத்துவது, மேலும் விவசாயம் சார்ந்த அகமுடையார் இனத்தின் இளைய தலைமுறைக்கு விவசாயத்தின் அவசியத்தையும், அதன் அழிவின் காரணத்தையும் எடுத்துரைத்து வேளாண்மையிலும் ஆளுமை செய்ய வைப்பது.

கல்வி, இலக்கியம், அறிவியல், அறநிலையம், சமூகச் சீர்திருத்தம், கலை, கைத்தொழில்கள், குடிசைத் தொழில்கள், உடற்பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு, மக்கள் நலவாழ்வு, சமூகப்பணி, பண்பாட்டு நிகழ்ச்சிகள், பயனுள்ள அறிவை விரிவாக்கப் பரப்புதல் போன்ற நோக்கங்களுக்கு பாடுபடுவது.

ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு), சிலம்பாட்டம், கபாடி இது போன்ற இன்னும் பல தமிழர்களின் வீரத்தைஅடையாளப்படுத்தும் விளையாட்டுகளை பாதுகாக்கவும் மற்றும் நடத்தவும் தொடர்ந்து முயற்சி செய்வது.

சமூகம், மொழி, கலைப் பண்பாடு போன்ற பல்வேறு தளங்களில்
செயலாற்றி மறைந்த அகமுடையார் இனப்பெரியோர்களின் சேவையை பாராட்டும் விதமாக அவர்களின் புகழை பரப்பும்விதமாக அவர்களின் திருவுருவப்படங்களும், நினைவுப் பரிசுகளும்,நினைவுப் புத்தகங்களும் வழங்கி வரலாற்றை மீளேடுக்க படுவதுவது.

நிகழ்காலத்தில் இலக்கியம்,நாடகம்,இசை,கவிதை போன்ற கலைப்பண்பாட்டு தளத்தில் இயங்கும் புதிய தலைமுறையின் திறமையை ஊக்கப்படுத்தி வெளியுலகுக்கு அடையாள படுத்துவது.

இதை தவிர சமுதாய மாற்றங்களை கணக்கில்கொண்டு மேலும் பல ஆக்கப்பூர்வ செயல்திட்டங்களை காலத்திற்கேற்ப உருவாக்கி செயல்படுத்துவது.