வரலாறு


வரலாறு என்பது புனையப்பட்ட வெறும் எழுத்துகளின் கோர்வையல்ல. அது, மண்ணில் புதையுண்ட மறைக்க முடியாத காலச்சுவடு. இப்போதெல்லாம், வரலாறு என்பது தங்களது மனதில் தோன்றும் எதையாவது ஒன்றை, எழுத்துகளின் வழியே வெளிப்படுத்திநாள் மட்டும் போதுமானது என்றாகி விட்டது. தங்களுக்கு தாங்களாகவே ஒரு கட்டுக்கதையை புத்தம்புது வரலாறாக உருவாக்கி, அதையே ஓர் ஆதாரமாக காட்டுவதையே வழமையாக்கி கொண்டுள்ளனர் சிலர்.
தொன்மையான தமிழின் இலக்கிய சான்றின்படி, ‘எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி, தான் சார்ந்துள்ள மண்ணையும், மக்களையும் பாரபட்சமின்றி காக்கும் திறன் கொண்ட ஓர் இனம், “தேவர்” யென்று வரலாற்றில் அடையாளப்படுகிறார்கள்.
“கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையார்
மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆகினாரே!”
கள்ளரும், மறவரும், அகமுடையாரும் தங்களது போர்த்தொழிலை முழு நேர தொழிலாகவும், கூடவே பகுதிநேரமாக, காடுகளை வளப்படுத்தி தங்களுக்கென்ற சொந்தமான நிலங்களை உருவாக்கி, அதில் விவாசாய பெருங்குடி மக்களை வேலையாட்களாக வைத்து வேளாண்மையிலும் (வேளாண்மை – வெள்ளாளர்) ஈடுபட்டு வந்தனர் என்பதை இந்த பாடல் குறிப்பிடுகிறது. போர் என்பது முழு நேரத்தொழிலாகவும், தங்களது மக்களின் உணவு உற்பத்தியை பெருக்கிக்கொள்ள, வேளாண்மையை பகுதி நேரமாகவும் கையில் எடுத்து நிலக்கிழார்களாகவும் விளங்கினர். குறிப்பாக, பொற்காலத்தில் காயமுற்ற அல்லது உடல் உறுப்புகளை இழந்த தேவரின மக்கள் அனைவருமே, தங்களுக்கென்ற நிலத்தை உருவாக்கி அதன்மூலம், விவாசாயம் செய்து வந்தனர். வேளாண்மை என்பது நேரடியாக வயலில் இறங்கி பணிபுரிவது மட்டுமல்ல. அதை மேலாண்மை செய்வதும் வேளாண்மையே. அந்த மாதிரியான நிலக்கிழார்களாக தேவரினத்தவர்கள் ஈடுபட்டு வந்தனர். பிற்காலத்தில் போர் என்பதே குறைவாகி போனபோது, வேளாண்மையை பெரும்பாலான தேவரின மக்கள் முழு நேரமாகவும் தங்களது வசமாக்கி கொண்டனர்.
ஓர் இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற, அவை தங்களுடைய கடந்தகால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும். தன்னை அறியாதவன், வாழ்வில் எந்தவொரு வெற்றியையும் அடைவதில்லை. அதுபோல, தேவர் மக்களும் தங்களது வரலாறையும் – தங்களது முன்னோர் செய்த வீர சாகசங்களையும், கொடைப் பண்பையும், நேர்மையையும், வெற்றியையும், கூடவே அவர்களது அறிவுசார் நுட்பத்தையும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். அப்போதுதான் அந்த உதேவேகத்தின் வழியாக, தேவரினத்து மக்களாகிய நாம், நம்மையே செம்மை படுத்திக்கொள்ள உதவும். தேவர் அனைவரும் நமது முன்னோர்களின் ஆவணங்களை பாதுகாக்க தவறியதின் விளைவாக, மற்றவர்கள் அதை உரிமை கொண்டாட வழியாக போய்க்கொண்டு இருக்கிறது.
பாசம், பற்று, வீரம், விவேகம்  போன்ற இவையனைத்தையும் ஒருங்கிணைந்து தேவரினத்து மக்களிடம் காணமுடியும். தேவரினத்து நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் மறைக்கப்பட்ட  பழைய வரலாற்றுச் சுவடுகளை, அனைத்து தரப்பட்ட மக்களின் வருங்கால நம்பிக்கையை உருவாக்கிகொண்டிருக்கும், தேவரின இளைய தலைமுறையினரும்  அறிய வழி செய்யும் நோக்கத்திலேயே “அகமுடையார் மக்கள் இயக்கம்” உருவாக்கப்பட்டது.
“மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; அதை -
நினைவு படுத்திக் கொண்டே இருப்பது எம் கடமை!”
எனவே, எங்களால் சேகரிக்க முடிந்த தகவல்களை இங்கே பதிவிடுகிறோம். அந்த தகவல்களை இளைய தலைமுறையினர், படித்தறிந்து, அதே முனைப்போடு  ஆர்வத்துடன் செயல்பட்டால் வரலாற்றில் தடம் பதித்த இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.